ஈரோடு கிழக்கில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 1,70,192 வாக்குகள் பதிவாகியிருந்தன. இது 74.79 சதவிகிதம் ஆகும். 88,037 மகளிரும், 82,138 ஆண்களும் வாக்களித்திருந்தனர். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகளவு வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்குத் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. 397 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன.
தபால் வாக்குப்பதிவு
காலை 8.25 நிலவரப்படி, ஈவிகேஎஸ் இளங்கோவன் 102 தபால் வாக்குகள் பெற்று 50 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையிலிருந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 52 வாக்குகள் பெற்றிருந்தார்.
அதுபோன்று 8.35 நிலவரப்படி 160 தபால் வாக்குகளைப் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். தென்னரசு 60 தபால் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதன்படி தற்போது வரை 100 தபால் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு
மறுபக்கம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் 1,454 வாக்குகளும், அதிமுக 246 வாக்குகளும், தேமுதிக 5 வாக்குகளும் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி 25 வாக்குகளும் பெற்றுள்ளன.
ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், ‘முதலமைச்சர் வாழ்க’ என கோஷமிட்டவாறு பட்டாசு வெடித்து காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
பிரியா
நாகாலாந்து மேகாலயா திரிபுரா வாக்கு எண்ணிக்கை துவங்கியது!
தபால் வாக்குகள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!