ஈரோடு கிழக்கு – அதிகாரப்பூர்வ முடிவில் தாமதம் : ஆட்சியர் விளக்கம்!

Published On:

| By Kavi


ஈரோடு கிழக்கில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

இதில் காங்கிரஸ்- 23,321, அதிமுக – 8,124, நாம் தமிழர் 1,498, தேமுதிக – 209 வாக்குகள் பெற்றுள்ளன. கிட்டதட்ட 15,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதோடு வாக்கு எண்ணும் மையத்துக்குள் செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை. இதனால் செய்தியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை என சொல்கிறீர்கள், அப்படி இல்லை. உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான் அதிகாரப்பூர்வமான முடிவை வெளியிட முடியும் இல்லையென்றால் அது தவறாகிவிடும்.

மீடியாவை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றில்லை. தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. விரைவில் முடிவுகள் வெளியிடப்படும்” எனக் கூறினார்.

தற்போது மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

பிரியா

12,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை!

திரிபுரா நாகாலாந்தில் பாஜக கூட்டணி முன்னிலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment