ஈரோடு கிழக்குத் தேர்தலில் இருமுனை போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவை மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதைமுன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடைசி நாளான இன்று (ஜனவரி 11) திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக என முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.
பாஜக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த நிலையில், 2023ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை தங்கள் கூட்டணி கட்சியாக இருந்த அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது. இந்த தேர்தலிலும் தமாகா போட்டியிடவில்லை.
இப்படி முக்கிய கட்சிகள் போட்டியிடாததால் நேரடியாக திமுகவும் நாம் தமிழர் கட்சியும் களம் காண்கிறது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் வாக்கு நாம் தமிழருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் உற்சாகமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக மூன்று அல்லது நான்கு முனைபோட்டி நிலவும் நிலையில், இந்த தேர்தல் நீயா? நானா? என இருமுனை போட்டியாக உள்ளது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்திருக்கும் நிலையில் மொத்தமாக 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் சுயேட்சைகள் 12 பேர் ஆவர்.
அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் 1, அனைத்து ஓய்வூதியதாரர்களின் கட்சி 1, தேசிய மக்கள் சக்தி கட்சி 1, இந்திய கணசங்கம் கட்சி 1, மறுமலர்ச்சி ஜனதா கட்சி 1, எம்ஜிஆர் மக்கள் கட்சி 1, நாடாளும் மக்கள் கட்சி 1, ஆகிய இதர கட்சிகள் சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
‘ஒரே மாசத்தில் இந்த ஷாப் மூடப்படும்’ -ஹனிரோஸ் புதிய கடை திறப்பு குறித்து நெட்டிசன்கள்
ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு : தேதி குறித்த உச்ச நீதிமன்றம்!