இடைத்தேர்தலை ரத்து செய்க: தேர்தல் ஆணையரிடம் தேமுதிக மனு!

அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தேமுதிக சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், திமுக வாக்காளர்களுக்கு அதிகளவு பணம் கொடுப்பதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் வாக்காளர்களுக்கு 1000 முதல் 5000 ரூபாய் வரை திமுக பணம் கொடுப்பதாகவும், இரண்டு கிலோ இறைச்சி கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி இருந்தார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தேர்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தாலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற எந்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக சார்பில் சத்ய பிரதா சாகுவிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தேமுதிக வழக்கறிஞர் அணி செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் சென்ற நிர்வாகிகள் சத்ய பிரதா சாகுவை சந்தித்து இந்த புகார் மனுவை கொடுத்துள்ளனர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜனார்த்தனன், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிகளவு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது ஆதாரங்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம்.

ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும், முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம் என்று கூறினார்.

இந்த புகார் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை அணுகவும் தேமுதிக திட்டமிட்டுள்ளது.

பிரியா

மெழுகுவர்த்தியை போல் திமுக ஆட்சி: அண்ணாமலை அட்டாக்!

மோதிக்கொண்ட பெண் அதிகாரிகள்: நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *