ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 சுற்றுகளாக 15 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 17,654 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக 5,372 வாக்குகளையும், நாம் தமிழர் 1,013, தேமுதிக 157 வாக்குகளையும் பெற்றுள்ளன.
12,000 வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.
முடிவு வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஈரோடு சித்தோடு பகுதியில் இருந்து செய்தியாளர்களிடம் பேசினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
அப்போது அவர், நாங்கள் கொள்கை சார்ந்த அரசியல் இயக்கம். அதிமுகவால் அவர்களது அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை என கூறினார்.
பிரியா
ஈரோடு கிழக்கு : முன்னிலை நிலவரம்!
திரிபுரா நாகாலாந்தில் பாஜக கூட்டணி முன்னிலை!