1 மணி நிலவரம்: ஆண்களை காட்டிலும் பெண்கள் வாக்குகள் அதிகம்!

அரசியல்

ஈரோடு கிழக்கில் மதியம் ஒரு மணி நிலவரப்படி ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகளவு வாக்களித்துள்ளனர்.

4 முனை போட்டி நிலவும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று (பிப்ரவரி 27) காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 9 மணி வரை 10.10% வாக்குப் பதிவாகி இருந்தது. காலை 11 மணி வரை 27.89% வாக்குப் பதிவானது. முதல் 4 மணி நேரத்தில் 32,562 ஆண்கள் மற்றும் 30,907 பெண்கள் என்று மொத்தம் 63,469 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

இந்நிலையில் ஒரு மணி நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், மதியம் ஒரு மணி நிலவரப்படி 44.56 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண்கள் 49,740 பேரும், பெண் வாக்காளர்கள் 51,649 பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆண்களைக் காட்டிலும் பெண்களின் வாக்குப்பதிவு 1900க்கும் அதிகமாக இருக்கிறது.

பிரியா

கௌதம் மேனனின் ‘பத்து தல’ லுக்: யாரை நினைவூட்டுகிறது?

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் குஷ்பு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0