சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
46 வயதில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தது அதிர்ச்சி அளிப்பதாக அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
திருமகன் ஈவெரா ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்து வந்தார். திருமகன் ஈவெரா மறைவையொட்டி அவர் பொறுப்பு வகித்து வந்த பதவி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.
தொகுதி காலியாக இருக்கும் தகவலைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைப்பார்.
ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.
தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவேண்டியதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
மோனிஷா
Comments are closed.