ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 7) அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல் நல குறைவால் காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
அதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி நிறைவடையும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18ஆம் தேதியும், வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாக ஜனவரி 20ஆம் தேதியும் குறிக்கப்பட்டுள்ளது.
அதே தேதியில் தான் டெல்லி சட்டமன்ற தேர்தலும், உத்தரபிரதேசத்தில் உள்ள மில்கிபூர் இடைதேர்தலும் நடைபெறும் என்றும் ராஜீவ் குமார் இன்று அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
நடிகர் பிரபுவை தாக்கிய நோய்… மூளை அனீரிசிம் வர என்ன காரணம்?
தமிழ்நாட்டில் ஹெச்எம்பிவி வைரஸ் எங்கெங்கே? சுகாதாரத் துறை சொல்வதை கவனிங்க!