ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. erode east bypoll ntk
திமுக வேட்பாளர் சந்திரகுமார் சூரம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். காலை 11 மணி நிலவரப்படி, 25.98 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்து நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிப்ரவரி 3-ஆம் தேதி பிரச்சாரம் முடிந்ததும் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர்.
இந்தநிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் பெரும்பாலான பூத்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஏஜென்டுகளே இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது.
அதாவது… ஒவ்வொரு பூத்களிலும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களே பூத் ஏஜெண்டுகளாக இருப்பார்கள். இந்தநிலையில், மொத்தமுள்ள 237 பூத்களில் 200 பூத்களுக்கு மேல் நாம் தமிழர் கட்சிக்கு பூத் ஏஜென்டுகள் இல்லை. இதனால் வாக்குச்சாவடி மையத்திற்குள் என்ன நடக்கிறது என்ற விவரங்களை அறியமுடியாத ஒரு சூழல் நாம் தமிழர் கட்சிக்கு நிலவுகிறது.ode east bypoll ntk