ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 67.97 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. Erode East Bypoll results
பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர்.
இந்தநிலையில், இன்று காலை 8 மணிக்கு ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக, 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. மொத்தம் 17 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை 7 மணியளவில் வாக்கு எண்ணும் மையத்திற்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார் வருகை தந்தார். காலை 11 மணியளவில் ஈரோடு சட்டமன்ற தொகுதி யார் கைவசம் என்பது தெரியவரும்.