ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. erode east bypoll percentage
காலை கடும் பனிமூட்டத்திலும் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். திமுக வேட்பாளர் சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன் சூரம்பட்டில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

இந்தநிலையில், காலை 9 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 10.85 சதவிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகிறது.