ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 9 மணி நிலவரம்!

அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 9 மணி வரை பதிவான வாக்குகள் விவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று (பிப்ரவரி 27) காலை தொடங்கியது. காலை 7 மணி தொடங்கி 9 வரை 2 மணி நேரத்தில் 10.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12,679 ஆண் வாக்காளர்கள், 10,294 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 22,973 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

கடந்த 2021 தேர்தலின் போது மொத்தமாக 93.43 வாக்குகள் பதிவாகின. இதில் மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 44.27 சதவிகிதத்துடன் 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

38.41 சதவிகிதத்துடன் 58,396 வாக்குகள் பெற்று தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜா தோல்வியுற்றார்.

7.65 சதவிகிதத்துடன் 11,629 வாக்குகளை நாம் தமிழர் கட்சியும், 6.58 சதவிகிதத்துடன் 10,005 வாக்குகளை மக்கள் நீதி மய்யம் கட்சியும் பெற்றது.

பிரியா

கை சின்னத்துக்கு 80 சதவிகித வாக்குகள் கிடைக்கும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு : வாக்கு மை அழிகிறது – அதிமுக புகார்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0