ஈரோடு கிழக்குத் தொகுதியில் 11 மணி வரை 27.89 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்று வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் வாக்களித்தனர்.
காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். சென்னை தலைமை கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலைத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கண்காணித்து வருகிறார்.
தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவு எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் 11 மணி நிலவரப்படி 27.89 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 63,469 பேர் வாக்களித்துள்ளனர். இதில் ஆண்கள் 32,562 பேர், பெண்கள் 30,907 பேர் அடங்குவர்.
தொடர்ந்து இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பிரியா