ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பிரச்சாரம் 3 ஆம் தேதியோடு முடியும் நிலையில், இடைத் தேர்தலில் திமுகவின் பட்ஜெட் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. erode east dmk budget
இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே முக்கிய போட்டியாளர்களாக களத்தில் இருக்கின்றன.
முதன்மையான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கியது. பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடவில்லை. இதனால்தான் திமுகவுக்கும் நாம் தமிழருக்கும் மட்டுமே போட்டி என்ற செயற்கையான அரசியல் சூழல் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் உருவாக்கப்பட்டுள்ளது. erode east dmk budget
இந்த இடைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக பலமான போட்டி இல்லாததால், வழக்கமான இடைத் தேர்தல் பாணியை இந்த முறை பின்பற்ற வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் முடிவெடுத்தார்.
இதுகுறித்து மின்னம்பலத்தில் ஜனவரி 13 ஆம் தேதியே, ஸ்டாலின் முடிவு: அமைச்சர்கள் நிம்மதி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதாவது இதுவரையிலான இடைத் தேர்தல் பாணியில், அனைத்து அமைச்சர்களும் ஈரோட்டில் முகாமிட்டு செலவு செய்ய வேண்டாம் என்று ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனால்தான் அமைச்சர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஈரோடு லோக்கல் திமுக நிர்வாகிகளிடம் பேசினோம்.
“இடைத் தேர்தல்னா திருவிழா மாதிரி இருக்கும். ஆனா இப்ப ஏனோதானோன்னுதான் போயிக்கிட்டிருக்கு. மாவட்ட அமைச்சர் முத்துசாமிதான் வீடு வீடா போய் பிரச்சாரம் பண்ணிக்கிட்டிருக்காரு. நாங்க ஒவ்வொரு ஏரியாவா போகும்போது மக்கள் வெளிப்படையாவே, ‘இந்த முறை பெரியளவு கவனிப்பு இல்லையே?’ என வாயை விட்டு கேட்கிறாங்க. அதிமுக காரங்க கூட, ‘இந்த முறை திமுக காரங்களை மட்டும்தான் கவனிப்பீங்க இல்லையா?’னு கேட்குறாங்க.
இதையெல்லாம் நாங்க அமைச்சர்கிட்டையும் சொன்னோம். அவரும் தலைமைக்கிட்ட சொல்லியிருக்காரு. இந்த நிலைமையில ரெண்டு மூணு நாள் முன்னாடி ஈரோட்டுக்கு வெளிய பெருந்துறையில ஒரு ஹோட்டல்ல ஆறு அமைச்சர்கள் வந்து ஒரு மீட்டிங் போட்டாங்க.
கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன் இவங்களோட லோக்கல் அமைச்சர் முத்துசாமி இந்த ஆறு பேரும் கூடி பேசினாங்க. இவங்களோட அறிவாலயத்துலேர்ந்து இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையும் வந்திருந்தாரு.
இந்த கூட்டத்துல என்ன பேசினாங்கன்னா… இந்த தேர்தல்ல நாமதான் ஜெயிக்கப் போறோம். ஆனா சீமான் கட்சி எந்த காரணத்தை வைச்சும் டெபாசிட் வாங்கிடக் கூடாது. பெரியார் மண்ணுல பெரியாரை எதிர்த்து பேசுறவன் இதுக்கு முன்னாடி வாங்கின ஓட்டை விட அதிகமா வாங்கிடக் கூடாது. அதிமுக காரங்க, மத்த கட்சிக்காரங்க கூட திமுகவுக்கு போடாம நாம் தமிழருக்கு ஓட்டு போட்டுடக் கூடாது.
அதனால நாம இந்த தேர்தல்ல மொத்தமுள்ள 2 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்களுக்கும் பணத்தைக் கொடுத்துடணும்’ அப்படினு பேசினாங்க. ஆயிரமா, ரெண்டாயிரமானு விவாதிச்சு கணக்கு போட்டு கடைசியில எல்லா வாக்காளர்களுக்கும் தலா 2 ஆயிரம் கொடுக்க முடிவாகியிருக்கு” என்கிறார்கள் திமுக லோக்கல் நிர்வாகிகள்.
வார்டு நிர்வாகிகளுக்கு பணம் சென்று சேர்ந்துவிட்டது, இன்று மக்களுக்கான டெலிவரி தொடங்கிவிடும் என்கிறார்கள். erode east dmk budget