ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஜனவரி 23) முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது. இதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி,வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் கூட்டணி கட்சி தலைவர்களான ஜி.கே.வாசன், அண்ணாமலை, ஜான் பாண்டியன் உள்ளிட்டவர்களை சந்தித்தனர்.
இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிற கழக உடன்பிறப்புகள், தலைமை கழகம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று முதல் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டண தொகையாக ரூ.15 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
பிக் பாஸ் வெற்றி: அசீம் சொன்ன பஞ்ச்!
இருபத்தெட்டு அரசுகளுக்கு ஒரே தேர்தல் சாத்தியமா?