ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜனவரி 18) நிறைவுற்ற நிலையில், 55 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் காலமானார். அதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதில் திமுக சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி இருவரும் கடைசி நாளான நேற்று தங்களது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 58 வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், திமுக, நாதக உட்பட 55 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஈரோட்டில் தேர்தல் நடத்தும் அலுவலரான மனிஷ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “வேட்பு மனு பரிசீலனை இன்று நடைபெற்றது. உரிய ஆவணங்கள் இல்லாததாலும், டெபாசிட் தொகை செலுத்த தவறியதாலும் 3 வேட்பாளர்களின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 55 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன. அதிகபட்சமாக 40 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் சார்பில் திமுக மற்றும் நாதக தரப்பில் தலா 2 என 4 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
மனுக்களை வாபஸ் பெற 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். அப்போது சின்னமும் ஒதுக்கப்படும்.
நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் கரும்பு விவசாயி , மைக் சின்னம் கேட்டுள்ளனர். எனினும் சின்னம் தொடர்பான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படியே சின்னம் ஒதுக்கப்படும்” என்று மனிஷ் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
- KKR vs RR: துஷாருக்கு 1 ஓவர் தானா? ராஜஸ்தான் தோல்விக்கு காரணம் இவர் தான்!
- நாளை ரிலீஸ்… நீதிமன்றத்தின் உத்தரவில் சிக்கிய விக்ரமின் வீர தீர சூரன் 2
- விஜய் சொன்ன வார்த்தை… எடப்பாடி முடிவின் அவசர பின்னணி!
- அரசியல்வாதி – காதலி வித்தியாசம் தெரியுமா – அப்டேட் குமாரு
- டிஜிட்டல் திண்ணை : அமித்ஷா லிஸ்ட்டில் சீமான்… திடீரென அவர் செய்த காரியம்… அதிர்ந்த எடப்பாடி – அந்த 50 நிமிடங்கள்!