ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 8) காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
காலை 10.30 மணி நிலவரப்படி, மூன்றாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 26,492 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3,177 வாக்குகள் பெற்றுள்ளார். வாக்கு வித்தியாசம் 23,315 ஆகும். Erode East Assembly Election