ஈரோடு கிழக்குத் தொகுதி யாருக்கு.?

Published On:

| By Kalai

Erode East Assembly Constituency for whom

ஈரோடு கிழக்குத் தொகுதி கடந்தமுறை அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு வழங்கப்பட்டு தோல்வியை சந்தித்த நிலையில் இந்தமுறை அந்தத் தொகுதி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுக கூட்டணி கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் சில தினங்களுக்கு முன் அவர் மாரடைப்பால் காலமானார். இந்த நிலையில் அந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெராவை எதிர்த்து அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் தாமாக யுவராஜா போட்டியிட்டு சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார்.

கடந்த தேர்தலில் தமாகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் இடைத்தேர்தலிலும் உரிமையுடன் கேட்டு பெறுவோம் என தமாக இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொங்கல் விழா மற்றும் நீட் பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த, யுவராஜா, கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்குத் தொகுதியில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்ததாக கூறினார்.

ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால், அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகாவிற்கு ஒதுக்க வேண்டும் என்ற நியாயமான உரிமையோடு கேட்டு பெறுவோம் என்றார்.

ஒவ்வொரு கட்சிக்கும் போட்டியிட விருப்பம் இருக்கும் என்பதால் அதன் அடிப்படையில் நேற்று அதிமுக.வினர் தேர்தல் கூட்டத்தை நடத்தியதாக கூறிய அவர், இது தொடர்பாக ஜி.கே.வாசனும், எடப்பாடி பழனிச்சாமியும் பேசி முடிவு செய்வார்கள் என கூறினார்.

தேர்தலை சந்திப்பதற்காக தமாகா தயார் நிலையில் இருப்பதாகவும், அடுத்த வாரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறிய யுவராஜா,

கூட்டணியில் சீட் கொடுத்தால் போட்டியிடுவோம், இல்லையெனில் கூட்டணி வெற்றிக்காக பாடுபடுவோம் என தெரிவித்தார்.

கலை.ரா

தலிபான்களால் தயாரிக்கப்பட்ட முதல் சூப்பர் கார்!

மெட்ரோ பாலம் விழுந்து விபத்து: தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment