ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 27) மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. இளம் வாக்காளர்கள் முதல் வயதானவர்கள் வரை ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர். மதியத்திற்கு பின்னர் அதிகமானோர் சென்று வாக்களித்தனர்.
இந்தநிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு பிறகு வந்தவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து பாதுகாப்பாக வாக்குப்பதிவு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
செல்வம்
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? – தேதியை அறிவித்த சபாநாயகர்
அதிமுக கட்சி விதி திருத்தம்: தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல்!