ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று (மார்ச் 2) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவானது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்தநிலையில், இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
இன்று காலை 6 மணி முதல் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 450-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது.
செல்வம்
”எம்எஸ்எம்இ கனெக்ட் 2023”: உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!