gayathri raguram challenge annamalai

அண்ணாமலைக்கு காயத்ரி இடைத்தேர்தல் சவால்! 

அரசியல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கட்சிக்குள் இருந்தபோதும் தொடர்ந்து விமர்சித்த காயத்ரி ரகுராம், பாஜகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு இன்னும் வீரியமாக எதிர்க்கத் தொடங்கியுள்ளார்.

அண்ணாமலை ஏப்ரல் மாதத்தில் இருந்து பாத யாத்திரை அறிவித்துள்ளார். இந்நிலையில், காயத்ரி ரகுராம் பெண்களின்  பாதுகாப்பை வலியுறுத்தி  அண்ணாமலைக்கு எதிராக சக்தி யாத்திரையை ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 27 ஆம் தேதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைபெறவிருந்த எனது ’சக்தி யாத்திரை’ ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு மாற்றுகிறேன்.

இந்த தேதி மாற்றத்திற்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம். அரசியல் கட்சியிலிருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன.

எனக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு இல்லை, எனவே ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கு எதிராக நீதிக்கு போராடும் ஒரு பெண் என்ற முறையில் நான் கவனமாக இருக்க வேண்டும்.

ஆனாலும், நான் பயப்படமாட்டேன். ஆகையால் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன். உண்மையும் நீதியும் வெல்லும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலையை ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நிற்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து  இன்று (ஜனவரி 23) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம்,

“அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் வேட்பாளராக போட்டியிட்டால் எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் உங்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக நான் நிற்கத் துணிந்தேன். ஆனால் மிகப் பெரிய கட்சியை வைத்துக்கொண்டு மாஸ் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் போட்டியிடத் தயாராக இல்லை.

உண்மை என்னவென்றால், களத்தில் இருவருக்கும் பூத் கமிட்டி அல்லது பூத் முகவர் இல்லை, உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம்- நான் சுயேச்சை, நீங்கள் ஒரு கட்சியின் தலைவர். ஆனாலும் என்னால் உங்களை வெல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் அடுத்தடுத்த ட்விட்டுகளில் அண்ணாமலையை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில், “அண்ணாமலையால்தான் தமிழ்நாட்டில் தேசிய பாஜக வளர்ந்திருக்கிறது என்று நீங்களும் உங்கள் வார்ரூமும் சொல்கிறீர்கள். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட மற்ற கட்சியை பெரிய கட்சி என்று கூறினால், அப்போ மற்ற கட்சியை விட பாஜக சிறியதா? பாஜக வளரவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
ஓப்டிக்ஸ் எல்லா நேரத்திலும் வேலை செய்யாது.

சூசகமா இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கி என்ன பயன்? நாடாளுமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளுக்கு பாஜக வெற்றி பெறும் எப்படி என்று வாக்குறுதி அளிப்பீர்கள்? அண்ணாமலை?

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை- சூசக தகவல் ’கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான்’ ’அண்ணாமலை சொன்னது எந்த அதிமுகவை?..ஓபிஎஸ் தரப்பையா? ஈபிஎஸ் தரப்பையா?’

காவி vs கருப்பு, காங்கிரஸ் vs பாஜக, ஆன்மீகம் vs நாத்திகம். இது சரியான தேர்தல் மற்றும் சரியான நேரம் அண்ணாமலை பயப்படக்கூடாது.

எப்படியும் பிப்ரவரி 7 வரை நேரம் உள்ளது எதுவும் நடக்கலாம்.. ஆட்டம் மாறலாம். அண்ணாமலை நீங்கள் பிரபலம்.. பாஜக சார்பில் அண்ணாமலை நிற்க வேண்டும்.” என்று சவாலாக ட்விட்டுகளை பதிவிட்டுள்ளார்.

மோனிஷா

சசிகலாவுக்கு எதிரான மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

நள்ளிரவில், முதல்வரின் பெண் செயலாளர் படுக்கை அறைவரை சென்ற அதிகாரி!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *