ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக, தேமுதிக, அமமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், தற்போது அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக போட்டியிடுவார் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இவர் 2016-ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கில் அதிமுஇக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக உள்ளார்.
செல்வம்
இஸ்ரேலில் உள்ள முக்கிய துறைமுகத்தை வாங்கிய அதானி நிறுவனம்!