ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தரக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அண்ணாமலையை சந்தித்தனர்.
தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை சந்திக்க, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த தங்கமணி,வேலுமணி,ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்றனர்.
பாஜக சார்பில் எச்.ராஜா,கரு.நாகராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன்,கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர். சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு இருந்தது.
அண்ணாமலையை சந்தித்த ஈபிஎஸ் அணியினர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் அணி வேட்பாளருக்கு முழு மனதுடன் ஆதரவு தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்பதற்காக தான் இங்கு வந்தோம்.அதிமுகவிற்கு ஆதரவு கோரி பேசினோம். பாஜகவின் நிலைப்பாடு குறித்து பாஜக தலைவர் கூறுவார்.
அவர்களது அலுவலகத்தில் அவர்களே தகவல்களை வெளியிடுவார்கள் என்று தெரிவித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடப் போவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதற்காக அவர் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். பாஜக தலைவர் அண்ணாமலையையும் சந்திக்கப் போவதாக அவர் தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முந்திக்கொண்டு ஆதரவு கேட்டுள்ளது.
கலை.ரா
சிறுபான்மை ஆணையத் துணைத்தலைவர் நியமனம்!