2024 நாடாளுமன்றத் தேர்தலை அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து சந்திப்போம் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு அவர் தனியாகச் செயல்பட்டு வருகிறார். அண்மையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனைச் சந்தித்தார். தொடர்ந்து சசிகலாவையும் சந்திப்பேன் என்று கூறினார்.
இந்நிலையில் நாகையில் இன்று (மே 25) செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலாவிடம் டிடிவி தினகரனைச் சந்தித்துள்ள ஓபிஎஸ் உங்களைச் சந்திப்பதாகச் சொல்லி உள்ளாரே என்ற கேள்விக்கு, “இந்த சந்திப்பு நிச்சயம் நடக்கும். 2024 தேர்தலில் அது உங்களுக்குத் தெரியும். அனைவரும் ஒன்றுதான் என ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன்.
தொண்டர்களின் விருப்பம் என்னவென்று மக்களுக்குத் தெரியும். தொண்டர்களின் ஆதரவும், மக்களின் ஆதரவும் இருந்தால் தான் ஒரு தலைமையைச் சொல்ல முடியும்.
எல்லோரையும் ஒன்று சேர்த்துச் செல்வதுதான் எனது வேலை. ஜானகி அம்மா இருந்த காலத்திலேயே நான் இதை செய்திருக்கிறேன்.வரும் 2024 தேர்தலில் மூன்று அணிகளும் நிச்சயமாக இணைந்தே சந்திப்போம்” என்றார்.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: அங்கேயும் வரலாமே? சேகர்பாபுவிடம் நைசாகப் பேசிய நிர்மலா சீதாராமன்
60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட’கில்லி’பட நடிகர்!
மறுபடியும் உங்க கால்ல விழ நாங்க தயாரில்லயே, அம்மணி…