எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரத்தில் விறுப்பு, வெறுப்பின்றி நியாயமான முறையில் முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அதிமுக பிரச்சினையில் சபாநாயகர் கட்டப்பஞ்சாயத்து ராஜா போன்று செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று(ஆகஸ்ட் 16) குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக சபாநாயகர் அப்பாவு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதங்கள் அவர்கள் கட்சி சார்ந்த பிரச்சினை என்றும் அதுகுறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரத்தில் விறுப்பு, வெறுப்பு இன்றி நியாயமான முறையில் முடிவெடுப்பேன் என்று கூறிய அப்பாவு, அவர்களின் உட்கட்சி பிரச்சினையை அரசியல் ஆக்க விரும்பவில்லை என்றார். சட்டமன்றத்துக்கென தனி உரிமை உண்டு, எனவே இபிஎஸ் – ஓபிஎஸ் கடிதங்களை ஆராய்ந்து யாருக்கும் காத்திருக்காமல் சட்டமன்ற மாண்பை பின்பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
கலை.ரா