ஒருசில நிமிடங்களில் தீர்ப்பு: ஈபிஎஸ் – ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை!

அரசியல்

சற்று நேரத்தில் பொதுக்குழு வழக்கு தீர்ப்பு வரவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பால் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களான, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.சி.சம்பத் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோன்று ஓபிஎஸ் இல்லத்திற்கு மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் வருகை தந்து இருக்கின்றனர். அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர ஆலோசனை நடத்திய வருகிறார். இந்தநிலையில் ஜல்லிக்கட்டு நாயகன், தேனியின் சிங்கமே, தமிழ்நாட்டின் சிங்கமே, ஒபிஎஸ் வாழ்க என அவரது ஆதரவாளர்கள் ஒபிஎஸ் இல்லத்தின் முன்பு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.தீர்ப்புக்கு பிறகு அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து இருதரப்பும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கலை. ரா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0