எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம் குறித்து சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 11 ) கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக, சபாநாயகர் அப்பாவு சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம் குறித்து சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் ஆர்.பி, உதயகுமாரைத் தேர்வு செய்துள்ளோம் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் சார்பில் இன்று (அக்டோபர் 11 ) காலை தன்னை கேட்காமல் முடிவு எடுக்கக் கூடாது என்று கடிதம் அளித்து இருந்த நிலையில், இப்போது எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பணக்காரராக ஆசைப்பட்டு 2 பெண்கள் நரபலி!
போன வருடம் ட்விட்- இந்த வருடம் விசிட்: தேவர் குருபூஜையில் மோடி?