எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவதற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 6 மணி முதல் ஏறத்தாழ 5 மணி நேரத்துக்கும் மேலாக அதிமுகவின் இரு முக்கிய, முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
இதனை கண்டித்து வேலுமணி வீட்டின் முன்பு குவிந்த 7 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,
“ மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,
ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7பேரையும், தொண்டர்களையும் சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிப்பதுடன்,
கைது செய்யப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
”என்னோடு 10 திமுக எம்.எல்.ஏ.க்கள் பேசி வருகிறார்கள்!” – பழனிசாமி