வேட்பாளரை அறிவித்த ஈபிஎஸ்: பாஜக முடிவு என்ன?- அண்ணாமலை

அரசியல்

கூட்டணி தலைவர்களிடம் என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுக இன்று (பிப்ரவரி 1) அறிவித்தது. அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதோடு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற புதிய கூட்டணியை அமைத்திருக்கிறார். அதுதொடர்பான பேனரில் பாஜக தலைவர்கள் யாரும் இடம் பெறவில்லை.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமல்ல.

கொஞ்சம் பொறுமையாக இருங்கள். திமுக கூட்டணியை எதிர்க்கக் கூடிய வகையில் அதிமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசு தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர்.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பண பலத்தைப் பயன்படுத்தி எப்பொழுதும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. எங்களைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிர்க்கப் பலமான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதுதான்.

எனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

திமுக கூட்டணிக்கு ஈரோடு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தப் போகிறது.

இன்று அதிமுக கட்சி தேர்தல் அலுவலகத்தில் கூட்டணி பெயரை மாற்றி இருப்பதும் பாஜக தலைவர்கள் படம் பேனரில் இல்லாதது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்” என்றார்.

பிரியா

காத்திருந்து காத்திருந்து… பாஜக இல்லாத புதிய கூட்டணி அமைத்த எடப்பாடி

உலக பணக்காரர்கள் பட்டியல் : அம்பானியிடம் தோல்வி கண்ட அதானி

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *