இடைத்தேர்தல் : கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்த பழனிசாமி

அரசியல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் தேர்தல் பணிக்கு கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் 31ம் தேதி தொடங்குகிறது.

திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனினும் இதுவரை அதிமுக – பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தேர்தல் பணிக்காக கூடுதல் பொறுப்பாளர்களை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக,

தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன், மாஃபா பாண்டியராஜன், சுதா கே.பரமசிவன், ராஜேந்திரன், சீனிவாசன், சரவணபெருமாள் தேர்தல் பணி பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, அதிமுக நிர்வாகிகளும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகளும், அதிமுக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, அதிமுக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

மருமகளுக்கு ’மறுமணம்’ செய்து வைத்த மாமனார்

சென்னையின் இளம் பெண் கவுன்சிலர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.