மாண்டஸ் புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் கல்லூரி தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும், மாண்டோஸ் புயல் காரணமாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அதனால், அந்த சமயத்தில் நடக்கவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள், கல்லூரி தேர்வுகள், டிப்ளமோ தேர்வுகள் ஆகியவை ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் 9,10ம் தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன.
இந்த தேர்வுகள் டிச.24 மற்றும் 31ம் தேதி நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த தேர்வுகள் ஜனவரி 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பின்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளில் ஒத்தி வைக்கப்பட்ட யுஜி மற்றும் பிஜி தேர்வுகளும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
“நீட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை” – அமைச்சர் நம்பிக்கை!
பத்திரிகையாளர்களுக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்