சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை இன்று (ஜூன் 16) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை கடந்த ஜூன் 13-ஆம் தேதி சோதனை நடத்தியது.
அமலாக்கத்துறை விசாரணையின் முடிவில் செந்தில் பாலாஜி ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார், அவருக்கு ஜூன் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமலாக்கத்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அவரது வீட்டில் இல்லை. இதனால் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரது வீட்டின் முன்பு அமலாக்கத்துறை சம்மன் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர். இதுவரை அசோக்குமார் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாததால் மீண்டும் அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
செல்வம்
”ஆதிபுருஷ்”: ட்விட்டர் விமர்சனம் இதோ!
செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை: சென்னை வரும் எய்ம்ஸ் குழு!