நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை!

அரசியல்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகளை “யங் இந்தியா” நிறுவனத்திற்கு மாற்றியதால் 2,000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

enforcement directorate raid in national herald case

இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் அமலாக்க துறையினர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஜூன் இரண்டாவது வாரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரான ராகுல் காந்தியிடம் இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு நிலைகளில் விசாரணை நடத்தப்பட்டது.

சுமார் 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்திய நிலையில்,

இன்று டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட 10 கிளை அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குதாரர்கள் தொடர்பான ஆவணங்கள் தொடர்பாகவும் நேஷனல் ஹரால்டு பத்திரிகை நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளதா என்பது தொடர்பாகவும் சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கலை

ஆதார்-வாக்காள அடையாள அட்டை இணைப்பு: அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *