உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை செய்தது. அப்போது அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை இன்று (ஜூலை 17) காலை முதல் சோதனை செய்து வருகிறது.
இதே போன்று விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று பெங்களூருவில் நடைபெறும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் . இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தக்காளி லாரி கவிழ்ந்து விபத்து: அள்ளிச்சென்ற மக்கள் – விரட்டியடித்த போலீஸார்!
உக்ரைனின் எட்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!