பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

அரசியல்

பிபிசி செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

‘இந்தியா: மோடி கேள்வி’ என்ற ஆவணப்படத்தை கடந்த ஜனவரி மாதம் பிபிசி வெளியிட்டது. இதனை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சியினர், அதனை பல்வேறு பகுதிகளிலும் வெளியிட்டனர்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு நடத்தியது.

“பிபிசி மூலம் இந்தியாவிலிருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ள தொகைகளுக்குக் கணக்குக் காட்டவில்லை. பல்வேறு பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விரைவில் விரிவாக விசாரணைக்கு உட்படுத்தப்படும்” என்று வருமான வரித்துறை தெரிவித்தது.

வருமான வரித்துறையின் செயல்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், இது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று கூறினர்.

இந்நிலையில் பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

நேரடி அந்நிய முதலீட்டு சட்டப்படி அனுமதி பெறாமல் நிதி பெற்று இருப்பதாக பிபிசி நிறுவனம் மீது அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. பிபிசி இந்தியா நிர்வாகம் உள்ளிட்ட துறையில் பணிபுரிபவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பிரியா

ஊழல் பட்டியல் : அண்ணாமலை வெளியிட்ட DMK Files!

திருச்சி மாநாடு போஸ்டர்களில் சசிகலா? ஓபிஎஸ்  போட்ட உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *