அமலாக்கத் துறை வழக்கில் வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜூலை 8 அன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
சட்டவிரோத பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியும் ஜாமீன் கிடைக்கவில்லை.
செந்தில் பாலாஜி மீதான வழக்கை 4 மாதத்துக்குள் முடிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை காலதாமதப் படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை வழக்கு தொடர்பான வங்கி ஆவணங்கள் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று (ஜூலை 4) விசாரணைக்கு வந்த போது, ஜூலை 8ஆம் தேதி வங்கி ஆவணங்கள் வழங்குவது தொடர்பாக உத்தரவு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதுபோன்று செந்தில் பாலாஜியின் 42ஆவது நீதிமன்ற காவல் இன்று நிறைவடைந்தது.
இதையடுத்து அவர் சிறையில் இருந்தவாறு காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து ஜூலை 8ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: எவ்வளவு தெரியுமா?
T20 World Cup: இந்திய அணி வீரர்களிடம் மோடி சொன்ன அந்த விஷயம்!