முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் ஒதுக்கவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் தொடங்கி ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடக்க விழாவில் கலந்துகொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்றார்.
ஆனால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 2) புதுக்கோட்டையில் விளக்கமளித்துள்ளார் அண்ணாமலை.
“அவர்கள் அழைக்கும் வரை காத்திருப்பேன் என்று ஓபிஎஸ் விரக்தியாக பேசுகிறாரே” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
“விரக்தியாக யாரும் இல்லை. ஓபிஎஸ் பெரிய தலைவர், தமிழ்நாட்டின் மக்களுக்காக அரும்பாடுபட்டவர். முன்னாள் முதலமைச்சராக இருந்திருக்கிறார். வேறு வேறுபொறுப்பில் மக்கள் பணிகளை செய்தவர். நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை. பாஜக தனது வேலையை செய்கிறது. அதிமுகவோடு அதிகாரப்பூர்வமாக கூட்டணி இருக்கிறது” என்று கூறினார்.
பிரியா
“நீதிமன்ற நடவடிக்கைகளால் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை” – அமலாக்கத்துறை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரிப்பு: ஓ.பி.ஆர். எம்பி. பதவி இழப்பு!
ஓடிடியில் உலக அளவில் சாதனை படைத்த மாமன்னன்!