எக்ஸ் தளத்தில் அதிக ஃபாலோயர்ஸ்: மோடிக்கு வாழ்த்து சொன்ன எலான் மஸ்க்

Published On:

| By Selvam

உலக அளவில் எக்ஸ் தளத்தில் அதிகம் பேர் பின்தொடரும் உலக தலைவர் என்ற பெருமையை பெற்ற பிரதமர் மோடியை டெஸ்லா தலைவரும், எக்ஸ் நிறுவருமான எலான் மஸ்க் இன்று (ஜூலை 20) பாராட்டியுள்ளார்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உலக நாடுகள் தலைவர்கள் அனைவரும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது கட்டாயமாகியுள்ளது. இதன் மூலம் தங்களது கருத்துக்களையும், அரசின் செயல்பாடுகளையும் பொதுமக்களுக்கு தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பாக எக்ஸ் வலைதளத்தை உலக தலைவர்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த ஜூலை 14-ஆம் தேதி எக்ஸ் வலைதளத்தில் 100 மில்லியன் ஃபாலோயர்ஸை கடந்து பிரதமர் மோடி சாதனை படைத்தார். அவருக்கு அடுத்தப்படியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடைன் 38.1 மில்லியன் ஃபாலோயர்ஸ், துபாய் அதிபர் ஷேக் முகமது 11.2 மில்லியன் ஃபாலோயர்ஸ், போப் பிரான்சிஸ் 18.5, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ 6.5, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 2.4 ஃபாலோயர்ஸ்களை கொண்டிருந்தனர்.

இந்தியாவை பொறுத்தவரை பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 27.5 ஃபாலோயர்ஸ், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 26.4 மில்லியன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் 19.9 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட பிரதமர் மோடிக்கு டெஸ்லா தலைவரும் ட்விட்டர் நிறுவனருமான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “உலக அளவில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவர் என்ற சாதனையை படைத்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க!

மைக்ரோசாப்ட் பிரச்சனை: 2-வது நாளாக சென்னையில் விமான சேவை பாதிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share