‘இலவச மின்சாரம் நிறுத்தப்படும் சூழல்’ – மின்சாரத் திருத்த மசோதா தாக்கல்!

அரசியல்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மின்சாரத் திருத்த மசோதா தாக்கல்

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கியது. சனி மற்றும்  ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு இன்று(ஆகஸ்ட் 8) மீண்டும் கூடியது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. அதன்படி மக்களவையில் புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தாக்கல் செய்தார்.

கூடுதல் அதிகாரம்

மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது உள்ளிட்டவை இந்த மசோதாவில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. மின்கட்டணங்களை ஒழுங்குமுறை ஆணையங்களே மாற்றியமைக்க புதிய சட்டத்தில் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் குறைந்தபட்ச, அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது

மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின்கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவேண்டும் என்பதே இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாகும். உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால் விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்தமுடியும் என்று மசோதா கூறுகிறது. ஆனால் இந்த மின்சார சட்டத்திருத்த மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ், தி.மு,க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தன.

இலவச மின்சாரம் பாதிக்கப்படும்

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் தமிழகத்தில் இலவச மின்சாரத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்தார். மின்சாரம் பொதுப்பட்டியலில் அடங்கி உள்ளதால் மாநிலங்களின் கருத்துகளை கேட்காமல் மின்சார திருத்த மசோதாவை கொண்டு வரக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

கலை.ரா

அரசியல் பேசினோம்: ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு ரஜினி

+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.