தேர்தல் பத்திரம் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Published On:

| By Selvam

Electoral bond case verdict

தேர்தல் பத்திரம் சட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று (பிப்ரவரி 15) தீர்ப்பளித்துள்ளது.

அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி பெற்றால், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்தது. Electoral bond case verdict

இந்த சட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இதன் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது விருப்பமான கட்சிகளுக்கு ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி வழங்கலாம்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றால் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க தேவையில்லை.

இந்த தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ வங்கி வெளியிடும். இந்திய குடியுரிமை பெற்ற யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்களை வாங்கி, ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை அரசியல் கட்சிகளுக்கு நிதி அனுப்பலாம்.

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படத்தன்மை இல்லை என்று கூறி, ஜனநாயக சீர்திருத்த சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் இந்த திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர் ஆஜராகி,

“தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற முறையில் நன்கொடை கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் குடிமக்களின் தகவல் அறியும் உரிமை மறுக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் ஊழல் செய்ய வழிவகுக்கிறது” என்ற வாதத்தை முன்வைத்தனர்.

மத்திய அரசு தரப்பில்  அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி,

“நன்கொடையாளர்களின் அடையாளம் மற்றும் அவர்களின் பங்களிப்பு குறித்த ரகசியத்தன்மை தேர்தல் பத்திரம் திட்டத்திற்கு முக்கியமானதாகும்.

தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை ரத்து செய்தால், கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை அரசியல் நன்கொடைகள் மூலமாக சுத்தப்படுத்தும் முந்தைய நிலைக்கு நாட்டை இட்டு செல்லும்” என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், Electoral bond case verdict

தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19(1)(a) ஆகியவற்றை மீறுகிறது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும், “அரசியல் கட்சிகள் பெறும் நிதியுதவி குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஒரே திட்டம் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அல்ல. வேறு மாற்று வழிகளும் உள்ளன” என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை!

மோடி இந்தியாவில் இதைச் செய்திருந்தால்.. மனோ தங்கராஜ் காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share