Electoral bond case

தேர்தல் பத்திரம் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

அரசியல்

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 15) தீர்ப்பளிக்க உள்ளது. Electoral bond case

அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி பெற்றால், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்தது.

இந்த சட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இதன் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது விருப்பமாக கட்சிகளுக்கு ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி வழங்கலாம்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றால் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க தேவையில்லை.

இந்த தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ வங்கி வெளியிடும். இந்திய குடியுரிமை பெற்ற யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்களை வாங்கி, ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை அரசியல் கட்சிகளுக்கு நிதி அனுப்பலாம்.

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி, ஜனநாயக சீர்திருத்த சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயா தாக்கூர், ஸ்பேண்டர் பிஸ்வால் உள்ளிட்டோர் இந்த திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஹன்சாரியா, பிரஷாந்த் பூஷன் உள்ளிட்டோர் வாதிட்டனர். மத்திய அரசு தரப்பில்  அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த நவம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. Electoral bond case

இந்தநிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தேர்தல் நிதி பத்திர திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: எல்லாருக்கும் ஏற்றதா ஹைட்ரா பேஷியல்?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0