பீகாரின் கோபால்கஞ்ச், உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ரநாத் தொகுதி, ஹரியானாவின் ஆதம்பூர், ஒடிசாவின் தாம்நகர் ஆகிய நான்கு தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றுள்ளது.
பீகாரின் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச், ஹரியானாவின் ஆதம்பூர், மகாராஷ்டிராவின் அந்தேரி (கிழக்கு), தெலங்கானாவின் முனுகோட், உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ரநாத் மற்றும் ஒடிசாவின் தாம்நகர் ஆகிய ஏழு தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த ஏழு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று ( நவம்பர் 6 ) நடைபெற்றது.
ஹரியானாவின் ஆதம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பவ்யா பிஷ்னோய் 16,606 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.
அதேபோல் உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ரநாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன் கிரி 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இதற்கிடையில், பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் தொகுதியையும் பாஜக தக்க வைத்துக் கொண்டது. பீகாரின் மொகாமா சட்டமன்ற தொகுதியை தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) வேட்பாளர் நீலம் தேவி வெற்றி பெற்றார். ஒடிசாவின் தாம்நகர் தொகுதியில் பாஜகவின் சூர்யபன்ஷி சுராஜ் வெற்றி பெற்றுள்ளார்
தொடர்ந்து, மகாராஷ்டிராவின் அந்தேரி (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சிவசேனாவின் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர் ருதுஜா லட்கே வெற்றி பெற்றார்.
டிஆர்எஸ் கட்சியின் பிரபாகர் ரெட்டி தெலங்கானாவின் முனுகோட் தொகுதியில் வெற்றி பெற்றார். பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் பாஜக 1700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டி20 WorldCup 2022: அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன்கள்!
ரசிகர்கள் கொஞ்சும் ரஞ்சிதமே…விஜய் புதிய சாதனை!