எலெக்சன் ஃப்ளாஷ்: ஜெயித்தாலும் தோற்றாலும் மத்திய அமைச்சர்! பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் திட்டம்!
கல்வி நிறுவனரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பாரிவேந்தர் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.
மற்றொரு கல்வி நிறுவனரும் புதிய நீதிக் கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம் பாஜக-அதிமுக கூட்டணியில் வேலூர் தொகுதியில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இருவரும் தற்போது மோடி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். பாரிவேந்தர் இந்த முறை தனக்கு பெரம்பலூர் தொகுதி வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அதிமுக-பாஜக கூட்டணி பிரிந்த பிறகு தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டாமல் ஒதுங்க நினைத்தார். ஆனால் பாஜகவிலிருந்து அவர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து கேட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அமித்ஷாவை வரவழைத்து திருச்சியில் கூட்டத்தினை நடத்தவுள்ளார் பாரிவேந்தர்.
அதேபோல் ஏ.சி.சண்முகமும் அதிமுக கூட்டணி இல்லாததால் தேர்தலில் நிற்க வேண்டாம் என நினைத்துள்ளார். ஆனால் அவரும் போட்டியிட வேண்டும் என பாஜக சார்பில் தொடர்ச்சியாக கேட்கப்பட்டுள்ளது. இதனால் வேலூரில் நிற்பதற்கான ஏற்பாடுகளை அவரும் தொடங்கியுள்ளார்.
இருவரின் வட்டாரங்களில் விசாரித்தபோது, நீங்கள் ஜெயித்தாலும், தோற்றாலும் மத்திய அமைச்சர்களாவது உறுதி என்று அமித்ஷா சொல்லியிருக்கிறார். அதனால் இருவரும் தேர்தல் வேலையை மும்முரமாக தொடங்கிவிட்டார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Video : ”சும்மா மெரட்டி விட்டுட்டாரு” SK 21 டைட்டில் இதுதான்!
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதம்: கட்சிகள் என்ன சொல்கின்றன?
நடிகர் விஜய்யின் கட்சிக்கு ஆதரவா? : பதறிய ஜெயம் ரவியின் பளீர் பதில்!