திமுகவின் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான நேருவின் மகன் அருண் நேரு இன்று (மார்ச் 1) பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அறிவாலயத்தில் விருப்ப மனுவை அமர்க்களமாக அளித்திருக்கிறார்.
அருண் நேருவோடு பெரம்பலூர், திருச்சி பகுதியில் இருந்து திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். அவர்களும் அருண் நேருவுக்காக விருப்ப மனுவைக் கொடுத்திருக்கிறார்கள். வந்திருந்த அனைவருக்கும் தனது தந்தை நேருவின் பாணியிலேயே சைவ, அசைவ விருந்து அளித்துள்ளார் அருண் நேரு.
சில நாட்களுக்கு முன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தேர்தலில் போட்டியிடுகிறீர்களா?” என்ற கேள்விக்கு ‘தலைமை என்ன முடிவு எடுக்குதோ அதாங்க’ என்று பதிலளித்திருந்தார் அருண் நேரு. இன்று அவரும், அவருக்காக பல நிர்வாகிகளும் விருப்ப மனு தாக்கல் செய்திருப்பதால், அவரே பெரம்பலூர் திமுக வேட்பாளர் என்பது அதிகாரப்பூர்வமற்ற வகையில் உறுதியாகிவிட்டது.
முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜின் தம்பி மகன் சந்திரமோகனை அதிமுகவின் வேட்பாளராக பெரம்பலூரில் நிறுத்தத் திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பெரம்பலூர் தொகுதியில் அடர்த்தியாக இருக்கும் முத்துராஜா சமுதாயத்தைச் சேர்ந்தவர் சந்திரமோகன்.
தற்போதைய திமுக சிட்டிங் பெரம்பலூர் எம்பியான பாரிவேந்தர் 2019 இல் உதயசூரியனில் நின்றார். இப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் பாரிவேந்தர் மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவெடுத்திருக்கிறார். பாஜக வேட்பாளராக ஐஜேகே கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயசீலன் போட்டியிடுகிறார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் குன்னம் தொகுதியில் போட்டியிட்டவர். அருண் நேருவுக்கு எதிரான வேட்பாளர்கள் இவர்கள்தான் என்பதே லேட்டஸ்ட் பெரம்பலூர் நிலவரம்!
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை ‘மெட்ரோ’ படைத்த புதிய சாதனை!
செம பிரமாண்டம், வெறும் 15௦ பேருக்கு மட்டுமே அழைப்பு… காதலரை கரம்பிடிக்கும் நடிகை மீரா சோப்ரா