வருகிற மக்களவைத் தேர்தலில் திமுகவில் எத்தனை பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாக கட்சிக்குள் எழுந்துள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு வென்றனர். இந்த முறை இவர்கள் இருவரும் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
இந்தத் தேர்தலில் திமுக 20 முதல் 23 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இவர்களில் அதிகபட்சம் 4 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்த விரும்புகிறாராம் ஸ்டாலின். ஏற்கனவே கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய வேட்பாளர்கள் உறுதியாகிவிட்ட நிலையில், மீதி இரு பெண் வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தங்கள் உறவினர்கள், ஆதரவாளர்கள் என பெண்கள் பெயரில் விருப்ப மனு செய்திருந்தவர்கள் இந்தத் தகவலைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
எலக்ஷன் ஃப்ளாஷ் : பொட்டு வைத்த படமே… விஜய் கட்சியினருக்கு உத்தரவு!
பிருத்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ ட்ரெய்லர் எப்படி?