தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் உறுப்பினர் சேர்க்கை செயலியை நேற்று (மார்ச் 8) வெளியிட்டு, வருகிற சட்டமன்றத் தேர்தலை நோக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதியிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களையும் தமிழக வெற்றிக் கழகத்தார் நடத்த தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கட்சி போஸ்டர்களில் விஜய் படம் அச்சடிக்கும்போது அவர் பொட்டு வைத்த படத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.
விஜய் கட்சி தொடங்கும் போது வெளியிட்ட அவரது படத்தில் பொட்டு வைத்திருந்தார். அதை வைத்தே பல விவாதங்கள் எழுந்தன. அந்த படத்தையோ அல்லது விஜயின் பொட்டு வைத்த படங்களையோ மட்டுமே போஸ்டர்களில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் விஜய் கட்சியின் நிர்வாகிகளுக்கு இடப்பட்டு இருக்கிற ஸ்டேண்டிங் ஆர்டர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
போதைப்பொருள் புழக்கம்: எக்ஸ் பயோவை மாற்றிய எடப்பாடி
IND vs ENG: 5-வது டெஸ்ட்டில் அபார வெற்றி… 4-1 என தொடரினை வென்று இந்தியா அசத்தல்!