நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியைத் துவங்கியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது என்றும், 2026 சட்டமன்ற தேர்தலே நமது இலக்கு என்றும் விஜய் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், திமுக, அதிமுகவில் பதவி இல்லாமல் இருப்பவர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் விஜய் கட்சியில் இணையலாமா என்ற ஆலோசனையில் உள்ளனர்.
விஜய் புதிய கட்சி தொடங்கிவிட்ட நிலையில், ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தாலும் திமுகவில் கட்சி பதவிகளில் தமிழகம் முழுதும் பலர் இருந்து வந்துள்ளனர். இப்போது அவர்கள் விஜய் கட்சிக்கு சென்றுவிடாமல் தடுத்து திமுகவிலேயே தொடரச் செய்ய வேண்டும் என்று திமுக மாசெக்களுக்கு அறிவாலயத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவில் இருந்துகொண்டே விஜய் இயக்கத்தில் இருந்த புள்ளிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்களே தொடர்புகொண்டு பேசி அவர்களது தேவைகளைக் கேட்டு கவனித்து வருகிறார்கள்.
இந்த அடிப்படையில்தான் ஏற்கனவே திமுகவில் இருந்து சற்று விலகி இருந்த விஜய் மக்கள் இயக்க தூத்துக்குடி மாசெ-வாக இருந்த பில்லா ஜெகனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சேர்த்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து பல மாசெக்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ள விஜய் ரசிகர்களான திமுகவினரை தக்க வைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சுவிட்சர்லாந்து இ-மெயில் நிறுவனம் கொடுத்த துப்பு!
தளபதி 69: இந்த ரெண்டு பேருல… விஜய் யாரை செலக்ட் பண்ணப்போறாரு?