எலக்‌ஷன் ஃப்ளாஷ் : தெலுங்கு ஓட்டுகளைக் குறிவைக்கும் விடுதலைக் களம்!

அரசியல்

தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் சமுதாயங்கள் 44க்கு மேல் உள்ளன. கம்மவ நாயுடு, கவர நாயுடு, வெளம நாயுடு, பலிஜா நாயுடு, தொட்டிய நாயக்கர், போயர், அருந்ததியர், பத்ம சாலியர், ரெட்டியார் உள்ளிட்ட இந்த சமுதாயத்தினரின் வாக்கு இதுவரை ஒருமித்து எந்த குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் விழுந்ததில்லை.

ஆனால் இந்தத் தேர்தலில் இந்த சமுதாயங்களை ஒருங்கிணைக்கும் வகையில் நாமக்கல்லை சேர்ந்த கொ.நாகராஜன் தலைமையிலான விடுதலைக் களம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் நாமக்கல்லில் நடந்த இந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த ராஜ கம்பள தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த கொ.நாகராஜன் தனது விடுதலைக் களத்துக்கு இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் பொது சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கும் விண்ணப்பித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஆங்காங்கே தெலுங்கு சமுதாய அமைப்புகளிடமும் பேசி வேட்பாளர்களை நிறுத்தவும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இவர்கள் சில ஆயிரங்கள் ஓட்டு வாங்கினாலும் அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில், வாய்ப்புள்ள இடங்களில் நிச்சயம் போட்டியிடுவோம் என்கிறார் நாகராஜன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

எலக்‌ஷன் ஃப்ளாஷ் : திமுகவில் 4 பெண் வேட்பாளர்கள்… ஸ்டாலின் லிஸ்டில் யார் யார்?

எலக்‌ஷன் ஃப்ளாஷ் : பொட்டு வைத்த படமே… விஜய் கட்சியினருக்கு உத்தரவு!

பாஜக கூட்டணியில் இணையும் சந்திரபாபு நாயுடு? டெல்லியில் அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0