விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் திமுகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவுடன் பிப்ரவரி 12 பிற்பகல் அறிவாலயத்தில் பேச்சு நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘விடுதலை சிறுத்தைகள் 3 தனித் தொகுதி 1 பொதுத் தொகுதி உள்ளிட்ட 4 மக்களவைத் தொகுதிகள் கேட்டிருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
அதேநேரம் திமுக தரப்பில் விசாரிக்கும்போது, ‘விசிக இறுதியாக 2 மக்களவை தொகுதிகள் ஒரு ராஜ்ய சபா இடம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்’ என்கிறார்கள். அந்த இரண்டில் ஒரு தனித் தொகுதி ஒரு பொதுத் தொகுதி வேண்டுமென்பது சிறுத்தைகளின் நிலை.
திருமாவளவன் கடந்த முறை போல பானை சின்னத்திலேயே தொடர்ந்து போட்டியிட உறுதியாக இருக்கிறார். அதேநேரம் தனது கட்சியில் இருந்து இன்னொருவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவதிலும் உறுதியாக இருக்கிறார். ஆனால், ராஜ்யசபா குறித்து திமுக எதுவும் வாக்குறுதி தரவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
SK 21: வெறித்தன லுக்கில் சிவகார்த்திகேயன்… டைட்டில் இதுதான்?
காதலர் தினத்துக்கு இடையூறா? – காங்கிரஸ் கோரிக்கை!