எலக்‌ஷன் ஃபிளாஷ்: ஒரு நாளைக்கு இரு தொகுதிகள்- ஸ்டாலின் பிரச்சாரத் திட்டம் இதுதான்!

அரசியல்

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறுகிற நிலையில், தலைவர்களின் பிரச்சாரத் திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கேற்கிறார். ஏற்கனவே மருத்துவர்கள் அதிக அலைச்சலை குறைத்துக் கொள்ளுமாறு முதல்வரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

அதனால், மாநிலம் முழுதும் வேனில் சென்று பிரச்சாரம் செய்யும் முறைக்கு பதிலாக ஒரு நாளைக்கு இரு தொகுதிகளில் பொதுக்கூட்டம் மூலம் பிரச்சாரம் என்று திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். இதன் மூலம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இருபது நாட்கள் பிரச்சாரம் செய்கிறார்.

இந்த வகையில் மார்ச் 22 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுடைய பிரச்சாரப் பெருந்திரள் பொதுக்கூட்டம் திருச்சியில் தொடங்குகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சி சிறுகனூரில் மாநாடு போன்ற பொதுக்கூட்டம் நடத்தியது திமுக. அதே இடத்தில்தான் மார்ச் 22 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் என இரு மக்களவைத் தொகுதிகளுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

அன்றில் இருந்து சிற்சில இடைவெளிகளோடு 20 நாட்கள் 40 தொகுதிகளில் பொதுக்கூட்டம் என தனது பிரச்சார ஸ்டைலை மாற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மாநிலம் முழுதும் நகரங்கள், கிராமங்கள் என பிரச்சாரம் செய்ய அமைச்சர் உதயநிதியும், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் திட்டமிட்டுள்ளனர்.

வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி மதுரையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது திமுக.

வேந்தன்

ஒரே வாரத்தில் 58 மீனவர்கள் கைது : மத்திய அரசுக்கு அன்புமணி கடிதம்!

கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *